Friday 28 April 2017

INDIAN SKYLARK வானம்பாடி


பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி..ஹா...
மார்கழி... மாதமோ...
பார்வைகள்..ஓ. ஈரமோ..ஓ.
ஏனோ...ஏனோ....

நண்பர் தங்கமணி அவர்களுடன் செங்குறிச்சி குளத்தில் பறவைகளைப் படமெடுத்துக் கொண்டிருந்தபோது 'வானம்பாடி' பறவையையும் படமெடுத்தோம். அப்போதுதான் வானம்பாடி குறித்து மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கையும் நினைவு வந்தது.

பறவை பாடி மழையா பெய்யும்?

பருவமழையே குறைந்துவருகிற வேளையில், செயற்கை மழை வருவித்தலும் தோற்ற வேளையில், கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, பறவை பாடினால் மழை பெய்யுமென்பது.ஆனால், வானம்பாடி பறவை வானில் உயரே சென்று பாடினால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இன்றும் நம்மிடையே உள்ளது.

வானம் பாடி வறங்களைந் தானா
தழிதுளி தலைஇய புறவிற் காண்வர
                                                                                                                                                      - ஐங்குநுறூறு 418

தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
- பட்டினப்பாலை வரி 3-4

மேலேயுள்ள பாடல்களில் மழைத்துளியை விரும்பி உண்ணும் பறவையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.இப்பறவையை வானம்பாடி என்று கூறுகிறோம். வானம்பாடி மழைக்காக ஏங்கிப்பாடுமென்றும் அதனால் மழை பொழியுமென்றும் ஐங்குறு நூற்றில் கூறப்பட்டுள்ளது. வானம்பாடி பாடியும் மேகம் அருளாது மழை பெய்யவில்லை என்று அகநானூறு கூறியுள்ளது.

வானம்பாடி மழைத்துளியை விரும்பி உயரத்தில் பறந்து பாடினால் மழை வரும் என்ற நம்பிக்கை சங்க காலத்திலேயே இருந்திருக்கின்றது. இந்த நம்பிக்கை நாட்டு மக்களிடையே வழங்கி வந்திருக்கலாம். ஆனால் மழைத்துளியை உணவாகக் கொள்ளும் பறவை இயற்கையில் எதுவும் இல்லை.

'துளிநசைப்புள்என்று புறநானூறு வானம் பாடியை அழைக்கின்றது. வறட்சி மிக்க காலத்தில் மழைத் துளிக்கு அலையும் புள் என்று கலித்தொகை கூறியுள்ளது.
இது 'தற்பாடி' என்றூம் அழைக்கப்படுகிறது. 'தன்' என்பதற்கு 'தண்ணீர்' என்று பொருள். தன்+பூசணி=தற்பூசணி அதாவது நீர்பூசணி என்றழைக்கப்படுவது போல
தன்+பாடி= தற்பாடி என்ற பெயர் வந்துள்ளது.
(தற்பூசணியை நாம் அதன் பொருளறியாமல் தர்பூசணி என்றழைக்கிறோம்.)

வானம்பாடியை ஆங்கிலத்தில் “THE INDIAN SKYLARK” என்றும் பறவை நூலில் ALAUDA GULGULA என்றும் கூறப்பட்டுள்ளது.

- பாலா பாரதி

INDIAN EAGLE OWL கொம்பன் ஆந்தை

குடிஞை | கொம்பன் ஆந்தை | INDIAN EAGLE OWL | BUBO BENGALENSIS | APR'17
குடிஞை ஒரு பேராந்தை ஆகும். இது மரங்களிளும் மலை முகடுகளிலும் தூங்கியபடி பகற்பொழுதைக் கழிக்கும். இது இரவாடிப் பறவை, இரவில் வெளிப்பட்டுக் காடை, கௌதாரி முயல், ஓணான், பாம்பு ஆகியவற்றை வேட்டையாடும். மக்கள் குடியிருப்புகளில் அவர்கள் வளர்க்கும் கோழி, புறா போன்றவற்றையும் தூக்கிச் செல்லும். இலக்கியங்களில், நெடுந்தொலைவு கேட்கும் படியாக ஹம் ஹம் எனக் கத்தும் என்ற விளக்கம் பறவையியலார் விவரங்களோடு ஒத்துப்போகிறது.
“மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை

பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப” – நற்றிணை - 394
பொற்கொல்லர்கள் குழல்கொண்டுத் தணலை ஊதும்போது ‘ஹும் - ஹும்' என்ற ஓசை எழுப்புவதுபோலப் குடிஞையின் குரலோசை இருந்ததாக நற்றிணை கூறுகிறது.
‘பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப’ - நற்றிணை - 394
இப்பாடலும் குடிஞையின் குரலைக் கூறுகிறது.
“மயில்க ளாலக் குடிஞை யிரட்டும்
துறுகல் லடுக்கத் ததுவே” - ஐங்குறு நூறு - 291
'குடிஞை இரட்ட' என்பது குடிஞை ‘பூம்- பூம்' என்று குரலோசையிடுவது பொற்கொல்லர்கள் ‘பூம் - பூம்’ என்று ஊதுவதுபோல் மாறிமாறி ஒலிப்பதையே ‘முன்னிய இரட்ட’ என்று பாடல் கூறுவது சுவையானது.
“திரிவயின் தெவிட்டுஞ் சேட்புலக் குடிஞைப்
பைதல் மென்குரல் ஐதுவந் திசைத்தொறும்” – அகநானூறு 283
அகநானூறு 283 ஆம் பாடலில் குடிஞையின் குரலோசை மாவரைக்கும் 'திரிகை' எழுப்பும் ஓசையைப்போல இருந்ததாகக் கூறுவது நுட்பமான விளக்கமாகும்.
“உருத்தெழு குரல குடிஞைச் சேவல்
புல்சாய் விடரகம் புலம்ப வரைய
கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண்” – அகநானூறு - 89
மலையின் மீதிருந்து கல் விழுவதைப் போன்றிருந்ததாம் குடிஞை வெகுண்டு எழுப்பும் குரலோசை. கல் உருளும் ஓசையைக் குடிஞை வெகுண்டு செய்யும் ஓசைக்கு ஓப்பிட்டது அழகிய உவமையாகும்.
இவ்வாந்தை மலையாளத்தில் 'காட்டுமூங்கா' எனவும், ஆங்கிலத்தில் ' INDIAN OR HORNED EAGLE OWL' எனவும், பறவை நூலில் 'BUBO BENGALENSIS' அழைக்கப்படுகிறது.
இவ்வாந்தைகள் மாந்திரீக செயல்களுக்காக வேட்டையாடப் படுவதால் இவற்றைப் பார்த்த இடத்தைக் குறிப்பிடவில்லை.

- பாலா பாரதி

Monday 17 April 2017

Amur falcon அமூர் வல்லூறு

அமூர் வல்லூறு | Amur falcon | Falco Amurensis | Koonthakulam | Dec'16
நமது அடுத்தபயணம், தமிழ்நாட்டுக்கு அறிதாகவே வரும் அமூர் வல்லூறு எனும் ஆற்றல் மிக்க பறவையைப் பார்க்க கூந்தக்குளம் நோக்கி அமைந்தது.
நண்பர் திரு ரவீந்திரன் நடராஜன் நம்மை கூந்தக்குளம் அழைத்துச் சென்று பல்வேறு பறவைகளைப் பற்றி விளக்கினார். ஆமூர் வல்லூறு என அழைக்கப்படும் ஃபால்கனிடோ குடும்பத்தில் ஃபால்கோ என்ற பேரினத்தைச் சேர்ந்த இப்பறவைகள் மிகவிரைவாகப் பறந்து இரையைத் தாக்கும் இயல்புடையவை. இவை இனப்பெருக்கம் செய்யும் கிழக்காசியப் பகுதியில் ஓடும் அமூர் என்ற ஆற்றின் பெயராலேயே இவை அழைக்கப்படுகிறது. இந்த அமூர் ஆற்றின் பெயரால் அமூர்புலி, அமூர் சிறுத்தைப்புலி ஆகிய உயிரினங்கள் அழைக்கப்படுவது சிறப்பு.
சீனாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து ஆப்ரிக்கக் கண்டத்தின் தென்பகுதிவரை மிகநீண்ட தொலைவுக்கு அதாவது 15,000 கிலோமீட்டர் வலசை செல்கின்றன. செப்டம்பர் - அக்டோபரில் வலசையைத் துவங்கும் இவை டிசம்பர் மாதத்தில் ஆப்ரிக்கா சென்றடைகின்றன. பெரும்பாலும் இந்தியாவின் மையப்பகுதியைக் கடக்கும் இவை இந்த வருடம் தமிழ்நாட்டின் வழியே சென்றது அவற்றைப் பார்க்க நமக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.
- பாலா பாரதி

Like
Comment

பச்சைகாலி

Common Greenshank | பச்சைகாலி | Tringa Nebularia | Kizhiyur Trichy | Mar'17
உள்ளான் இனத்தைச் சேர்ந்த இவை வடஐராப்பாவிலிருந்து ஆசியாவரையுள்ள பகுதிகளில் இனப்பெருக்கம் செய்பவை. குளிர்காலத்தில் இந்தியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவரை இடப்பெயர்ச்சி செய்பவை. இவற்றின் பச்சைநிறக் கால்களையும் சற்றே மேல் நோக்கி வளைந்த அலகையும் கொண்டு இவற்றை மற்ற உள்ளான்களிலிருந்து பிரித்தறியலாம்.
- பாலா பாரதி

Vernal Hanging Parrot குட்டைக்கிளி

குட்டைக்கிளி | Vernal Hanging Parrot | Loriculus Vernalis |Vellerikkombai Nilgiris | March'17
இவ்வகைக் கிளிகள் கிழக்கு, மேற்குத் தொடர்ச்சிமலைகளின் காடுகளில் காணப்படுகின்றன. வலசை செல்லாத இப்பறவைகள் தலைகீழாகக் தொங்கியபடி தூங்கும் வினோதமான பழக்கம் உடையவை. பழங்கள், பூக்களைத்தேடி மரத்திற்கு மரம் தாவியபடியும் கிளைகளில் நடந்தபடியும் இருப்பதைக் காணலாம்.
வீட்டுக் குருவியைவிட சற்றே பெரிய அளவுடைய இவற்றின் அலகும் பின்புற இறக்கையும் சிவப்பு நிறத்தில் இருக்கும். தொண்டைப்பகுதி ஆண்பறவைகளுக்கு நீல நிறத்திலும் பெண்பறவைகளுக்கு பச்சை நிறத்திலும் காணப்படும். மரபொந்துகளில் இலைகளைக்கொண்டு கூடமைத்து இரண்டு முதல் நான்கு முட்டைகள் இடும்.
- பாலா பாரதி

மஞ்சக்காட்டு மைனா

"மஞ்சக்காட்டு மைனா என்னை கொஞ்சி கொஞ்சி போனா..."
காட்டு மைனா | Jungle Myna | Nilgiris | March'17
சாதாரண மைனாவிலிருந்து சற்று மாறுபட்ட இவற்றிற்கு சாதாரன மைனாவுக்கு கண்களைச் சுற்றிக் காணப்படும் பிரகாசமான மஞ்சள் நிறத் திட்டு இருக்காது. மூக்குக்கு மேல்புறம் தலையில் கொண்டை போலக் காணப்படும்.
'ஸ்டார்லிங்' குடும்பத்தைச் சேர்ந்த இவை தெற்காசியாவின் வெப்பமண்டல பகுதிகளில் இந்தியா, மியான்மர் தொடங்கி கிழக்கில் இந்தோனேசியா வரை காணப்படுகின்றன.
காடுகள், நீர்நிலைகள் வயல்வெளிகளில் காணப்படும் இவை மரப் பொந்துகளில் கூடு அமைத்து 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்.
- பாலா பாரதி

நீலகிரி ஈப்பிடிப்பான்

நீலகிரி ஈப்பிடிப்பான் | Nilgiri Flycatcher|Tiger Hills Nilgiri |Mar ' 17

நீலகிரி சிரிப்பான்

"அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு...
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ
ஆனந்தச் சிரிப்பு...."
நீலகிரி சிரிப்பான் | Nilgiris Laughing Thrush | Tiger Hills, Nilgiris | 



White-cheeked Barbet |White-cheeked Barbet |குடுக்கைக் குருவி | Vellarikkombai Nilgiris |




Southern Hill Myna

Southern Hill Myna | Vellarikkombai Nilgiris




Image may contain: bird




செம்மீசை சின்னான்



Red-whiskered Bulbul | Tiger Hill Nilgirs | Mar'17
செம்மீசை சின்னான்(Red-whiskered Bulbul)
கிட்டத்தட்ட அளவில் செம்புழை கொண்டைக் குருவி (Red-vented Bulbul) மாதிரியே இருந்தாலும், கண்ணுக்குக் கீழே கூடுதலாக சிவப்பு மீசைப் போன்ற அமைப்பிருக்கும். கழுத்து முதல் அடிவயிறு வரை நல்ல வெள்ளை நிறமாகவும் காணப்படும்.
-பாலா பாரதி

டிக்கல் நீல ஈ பிடிப்பான்

பறவைகள் பலவிதம்
டிக்கல் நீல ஈ பிடிப்பான் | Tickell’s Blue Flycatcher | Cyornis Tickelliae | Tiger Hills Nilgiris | Mar'17
டிக்கல் நீல ஈ பிடிப்பான்களில் ஆண்பறவைகள் உடலின் மேற்பகுதி நீல நிறத்திலும் தொண்டைப்பகுதி ஆரஞ்சு நிறத்திலும் பெண்பறவைகள் நிறம் குறைந்தும் காணப்படுகின்றன. இந்தியாவிலிருந்து இந்தோனேசியா வரை காணப்படும் இவை வலசை செல்வதில்லை. வீட்டுக் குருவியின் அளவே காணப்படும் இவை பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன.
இந்திய, நேபாள, மியான்மார் காடுகளில் சுற்றித்திருந்து பல அறியவகைப் பறவைகளை பதிவுசெய்த பிரிட்டிஷ் பறவையாளர் சாமுவேல் டிக்கல் (Samuel Tickell) அவர்களின் மகத்தான பணியை நினைவுகூறும் வகையில் இப்பறவைக்கு 'டிக்கல் நீல ஈ பிடிப்பான்' என பெயர் சூட்டியுள்ளனர்.
Tickell’s Flowerpecker, Tickell’s Thrush ஆகியவை டிக்கலின் பெயரால் அழைக்கப்படும் மற்றப் பறவைகள் ஆகும்.
- பாலா பாரதி


Image may contain: bird and outdoor



ஜெர்டன் வானம்பாடி

பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி..ஹா...
மார்கழி... மாதமோ...
பார்வைகள்..ஓ. ஈரமோ..ஓ.
ஏனோ...ஏனோ.... "
ஜெர்டன் வானம்பாடி | Jerdon's Bushlark | Kallanai Trichy | March'17
வானம்பாடிகள் வீட்டுக் குருவிகளை விட அளவில் சற்று பெரிதாகக் காணப்படும். இவற்றை வயல்வெளிகளிலும், புதர்களிலும் பார்க்கலாம். வானம்பாடியினத்தின் ஒருவகை இந்த ஜெர்டன் வானம்பாடி.
இப்பறவை ஜெர்டன் என்ற ஆங்கில பறவையாளரின் பெயரால் அழைக்கப்படுகிறது. மருத்துவரான தாமஸ் கேவரிஹில் ஜெர்டன் விலங்கியளாளராகவும், தாவரவியளாளராகவும் விளங்கியவர். இவர் இந்தியாவில் உள்ள பறவைவைகள், தாவரங்களை ஆராய்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். 'The Birds of India' என்ற நூலை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். இந்தியாவில் பறவைகளைப்பற்றி வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கு இந்த நூலே முன்னோடியாக அமைந்தது. இவரின் இந்த அறிய பணியைப் பாராட்டும் விதமாக இவர் பெயரை சில தாவரங்களுக்கும் (ஜெர்டோனியா) பறவைகளுக்கும் (ஜெர்டன் கோர்சர்) வைத்துள்ளனர்.
- பாலா பாரதி




Image may contain: bird



வண்ணாத்திக்குருவி

வண்ணாத்திக்குருவி |கருப்பு வெள்ளைக் குருவி | குண்டுக்கரிச்சான் | Oriental Magpie-Robin | Copsychus Saularis | Nilgiris | Mar '17
தனது வாலைத் தூக்கியபடி நிற்கும் இயல்புடைய இக்குருவிகளை நம் வீட்டுத் தோட்டங்களிலும் காடுகளிலும் பார்த்திருப்போம்.
குறிப்பாக, பிப்ரவரி மாதம் அடர் கருப்பு வெள்ளை நிறத்துடன் இக்குருவிகள் திடீரெனத் தோன்றி, இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக்கிளைகளிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து உற்சாகமாகப் பாடுவதைப் பார்த்திருப்போம். பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைப் பெரும்பாலும் பார்க்கமுடியும். மற்ற மாதங்களில் இவை பாடுவதில்லை என்பதால், இவை இருப்பதை தெரிந்து கொள்வது கடினம்.
ஆண் குருவி கருப்புநிற மேல்பகுதியி வெள்ளைநிறத்தில் தோள்பட்டைச் சிறகுடனும் அடிப்பகுதி வெள்ளைநிறத்துடனும் காணப்படும். பெண் குருவி சாம்பல் நிறமுடையது. இவை அருமையாகப் பாடி தன் எல்லையை அறிவிக்கும் இயல்பு கொண்டவை.
- பாலா பாரதி



Image may contain: bird, sky and outdoor





எழுமிச்சை வாலாட்டி

எழுமிச்சை வாலாட்டி | Citrine Wagtail | Motacilla Citreola | Kizhiyur Trichy | Mar'17
கிளியூர் குளத்தில் இருந்த அந்த குறைந்த அளவு தண்ணீரில் வலைபோட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நம் கவனத்தை அந்த சிறிய பறவை கவர, அதன் பின்னாலேயே போய்க்கொண்டிருந்தோம்.
நல்ல மஞ்சள் நிறத்தில் உடலையும் கருப்புநிற இறக்கைகளையும் கொண்டிருந்த, வீட்டுக்குருவியைவிட அளவில் சற்றுப் பெரிய குருவியை அப்போதுதான் முதலில் பார்த்தோம். மஞ்சள் வாலாட்டியிலிருந்து சற்று மாறுபட்டஇவை பலுசிஸ்தான், இமயமலைப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து இந்தியாவின் மையப் பகுதிவரை வலசை வருகின்றன. தமிழ்நாட்டுக்கு அரிதாகவே வருகின்றன.
இலைகளின் மீது சுறுசுறுப்பாக இரைதேடிக் கொண்டிருந்தது இலைமீது எழுமிச்சை பழம் ஓடுவது போன்று இருக்க அங்கேயே உட்கார்ந்து 'சகுனம்' பார்க்க ஆரம்பித்தோம்.
ஆமாம்...கடந்த ஞாயிறு அன்று கிளியூர் குளத்தில் சகுனம் பார்த்தோம் அதுவும் மஞ்சள் சகுனம்.
வடமொழியில் சகுனம் என்றால் பறவை என்று பொருள். இதை வைத்து தான் சகுனம் பார்ப்பது, நல்ல சகுனமா?, கெட்ட சகுனமா? என்ற சொற்றொடர்கள் உருவாயின.
தமிழ்நாட்டில் உள்ள கிளிஜோதிடம் போல வராகமிகிரர் குருவி ஜோதிடம் கூறுகிறார் அதுவும் வாலாட்டிக்குருவி.
வராஹமிகிரர் சொல்லும் வாலாட்டிக் குருவி
“மஞ்சள் நிறத்திலுள்ள வாலாட்டிக் குருவிகளுக்கு கோபிலா என்று பெயர். அதைப் பார்த்தால் தொல்லைகளே வரும்".
நமக்கு தொல்லையேதும் வரவில்லை சகுனங்களுக்குத்தான் நம்மால் அன்று தொல்லை ஏற்பட்டது.
- பாலா பாரதி

Image may contain: bird and outdoorImage may contain: bird and outdoor