எழுமிச்சை வாலாட்டி | Citrine Wagtail | Motacilla Citreola | Kizhiyur Trichy | Mar'17
கிளியூர் குளத்தில் இருந்த அந்த குறைந்த அளவு தண்ணீரில் வலைபோட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நம் கவனத்தை அந்த சிறிய பறவை கவர, அதன் பின்னாலேயே போய்க்கொண்டிருந்தோம்.
நல்ல மஞ்சள் நிறத்தில் உடலையும் கருப்புநிற இறக்கைகளையும் கொண்டிருந்த, வீட்டுக்குருவியைவிட அளவில் சற்றுப் பெரிய குருவியை அப்போதுதான் முதலில் பார்த்தோம். மஞ்சள் வாலாட்டியிலிருந்து சற்று மாறுபட்டஇவை பலுசிஸ்தான், இமயமலைப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து இந்தியாவின் மையப் பகுதிவரை வலசை வருகின்றன. தமிழ்நாட்டுக்கு அரிதாகவே வருகின்றன.
இலைகளின் மீது சுறுசுறுப்பாக இரைதேடிக் கொண்டிருந்தது இலைமீது எழுமிச்சை பழம் ஓடுவது போன்று இருக்க அங்கேயே உட்கார்ந்து 'சகுனம்' பார்க்க ஆரம்பித்தோம்.
ஆமாம்...கடந்த ஞாயிறு அன்று கிளியூர் குளத்தில் சகுனம் பார்த்தோம் அதுவும் மஞ்சள் சகுனம்.
வடமொழியில் சகுனம் என்றால் பறவை என்று பொருள். இதை வைத்து தான் சகுனம் பார்ப்பது, நல்ல சகுனமா?, கெட்ட சகுனமா? என்ற சொற்றொடர்கள் உருவாயின.
தமிழ்நாட்டில் உள்ள கிளிஜோதிடம் போல வராகமிகிரர் குருவி ஜோதிடம் கூறுகிறார் அதுவும் வாலாட்டிக்குருவி.
வராஹமிகிரர் சொல்லும் வாலாட்டிக் குருவி
“மஞ்சள் நிறத்திலுள்ள வாலாட்டிக் குருவிகளுக்கு கோபிலா என்று பெயர். அதைப் பார்த்தால் தொல்லைகளே வரும்".
நமக்கு தொல்லையேதும் வரவில்லை சகுனங்களுக்குத்தான் நம்மால் அன்று தொல்லை ஏற்பட்டது.
- பாலா பாரதி
No comments:
Post a Comment