பறவைகளிடமுள்ள வினோதங்களில்
இடம்பெயர்தல் என்ற வலசை போதல் அதாவது ஒவ்வொரு வருடமும் ஒரு பருவ காலத்தில் இடம்
பெயர்ந்து வாழ்தல் ஆகும்(Bird
Migration).
இடம் பெயர்வது என்றால் ஒன்றோ இரண்டோ
அல்ல. வித
விதமான பறவைகள் கோடிக் கணக்கான எண்ணிக்கையில் இடம்பெயரும். அவ்வாறு இடம் பெயர்வதற்காக பறவைகள்
பறக்கும் தூரம் சில நூறு மைல்களில் இருந்து பல ஆயிரக் கணக்கான மைல்கள் வரை.
இடம்பெயர்தல் என்றால் நாம் ஒரே ஊரில்
அல்லது ஒரே நாட்டில் வீடு மாறுவது போல் அல்லாமல் வட துருவப் பிரதேசத்திலிருந்து
தென் துருவப் பிரதேசம் வரை இடம்பெயர்கின்றன. பல பறவைகள், சுமார் 10,000மைல்களி லிருந்து 14,000 மைல்கள் தூரத்திற்கு பறக்கின்றன. அது அந்தப் பறவைகளால் கடும்
குளிரினைத் தாங்க முடியாமல் போவதால் அல்ல, போதுமான அளவு உணவு கிடைக்காததாலும்
இனப்பெருக்கம் செய்வதற்காகவும்தான்.
பறவைகள் இடம் பெயர்தல் குறித்து பல ஆராய்ச்சிகள் நடத்தப்
படுகின்றன. அவற்றால்
பல வியப்பான உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பறவைகளுக்கு வளயம் அல்லது காப்புப்
போடுதல்(Bird ringing or banding) மூலமாக அவற்றின் நடமாட்டம் கவனிக்கப்படுகிறது.
பறவைகளைப் பிடித்து அதன் காலிலோ
இறக்கையிலோ அலுமினியம் அல்லது ப்ளாஸ்டிக்கினால் ஆன காப்பினைமாட்டி விடுவர். அந்தக் காப்பில் ஒரு எண்ணும் காப்பினை
மாட்டியவரின் முகவரியோ தொலைபேசி எண்னோ இருக்கும்.
இப்போதெல்லாம் பறவைகளின் உடலில் மிக
நுண்ணிய மின் அலை பரப்பியினைப் பொருத்தி அதிலிருந்து எழும் மின்அலைகளை தரையில்
உள்ள மின்அலை வாங்கி நிலயங்களின் மூலமோ அல்லது செயற்கைக் கோள்களின் மூலமோ
கிடைக்கப் பெற்று அந்தப் பறவை உள்ள இடம், பறக்கும் உயரம், வேகம் போன்ற தகவல்கள் துல்லியமாகக்
கண்டறியப்படுகின்றன.
நாமெல்லாம் பக்கத்து ஊருக்கு போனாலே
கையில் முகவரியை வைத்துக்கொண்டு போகிற வருகிறவர்களையெல்லாம் டார்ச்சர் கொடுப்போம்
இல்லையா? ஒரு ஆலா
செய்த வேலையைப் பாருங்கள்.
பிறந்து சில நாட்களேயான ஆலா குஞ்சு
ஒன்று கண்காணிக்கப்பட்டது. காப்பு போடப்பட்ட இந்த ஆர்டிக் ஆலா இங்கிலாந்தின்
கிழக்குக் கரையில் இருந்து கிளம்பியது. மூன்று மாதங்களில்
14,000 மைல்கள்
கடந்து ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னை அடைந்தது.
நம்ம கல்பொருக்கியின் கதையை
கேளுங்கள்.
இதுவரை வலசை போகும் போது உலகிலேயே
அதிக தூரம் சுமார் 4,800 கிலோமீட்டர்கள் ஒரே மூச்சில் நிற்காமல் பறந்து சாதனை
செய்திருக்கிறது கல் பொறுக்கி என்று தமிழ் நாட்டில் அழைக்கப் படும்
கோல்டன் ப்ளோவர் (Golden Plover) ஆகும்.
இந்தப் பறவைக்கு கல் பொறுக்கி என்ற
பெயர் ஏன் வந்தது தெரியுமா? இது தரையில் உள்ள சிறு கற்களைத் தள்ளி அதனடியில் கிடைக்கும் புழு
பூச்சிகளைத் தின்னும் இது கோல்டன் ப்ளோவர்(GOLDEN PLOVER) என்றும் அழைக்கப்படுகிறது.
நீண்டதூரம் பறந்து சாதனைப்புரிந்து
முதல் இடத்தில் இருந்த கல் பொருக்கியை தோற்கடித்தது நம்ம 'மூக்கான்'. தமிழ்நாட்டில் மூக்கான் என அழைக்கப்
படும் GODWIT பறவை இந்த சாதனையை எவ்வாறு புரிந்தது எனப்பாருங்கள்.
நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள
மிராண்டா எனும் இடத்திலிருந்து 2007 இல் கிளம்பிய பெண்மூக்கான் ஒன்றின்
உடலில் சிறிய ரேடியோ மின் அலைபரப்பி பொருத்தப்பட்டது.
E-7 என்று பெயர் கொடுக்கப்பட்ட இதன்
போக்குவரத்து செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
மார்ச் 17ஆம் தேதி மிராண்டாவிலிருந்து கிளம்பிய
மூக்கான் எங்கும் தரையிறங்காமல் 6,300 மைல் தூரத்தில் சீனாவில் உள்ள 'யாலு ஜியாங்' என்ற இடத்தை 8 நாட்களில் அடைந்தது. பின், 5 வார ஓய்வுக்குப் பின் அங்கிருந்து
கிளம்பிய மூக்கான் 5 நாட்களில் 4,500 மைல் தூரத்தில் உள்ள மேற்கு
அலாஸ்காவின் யூகான்-குஷாக்வின் முகத்துவார பிரதேசத்தை அடைந்தது. இந்த இடம் தான் அது இனப் பெருக்கம்
செய்யும் இடம்.
பின்னர் ஆகஸ்ட் 29ஆம் தேதி கிளம்பி வேறு பாதயில் 7,200 மைல் தூரம் ஒரே மூச்சில் பறந்து
எட்டரை நாட்களில் நியூசிலாந்தின் மிராண்டாவை அடைந்தது. அதாவது கிளம்பிய இடத்துக்கு
வந்து சேர்ந்தது.
மூக்கான்களை கோடியக்கரையில் நவம்பர்
முதல் பிப்ரவரி வரை காணமுடியும்.
(நன்றி :கல்பட்டு நடராஜன்)
நன்றி
பாலா பாரதி
No comments:
Post a Comment