"வான் பறந்த தேன்சிட்டு நான் புடிக்க வாராதா..."
இந்தியப் பறவைகளுள் மிகச் சிறியன தேன்சிட்டு, பூஞ்சிட்டு வகைகளே. மலர்களிலிருந்துத் தேனை எடுத்து உண்ணும் எனினும் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் போது சிறு பூச்சிகளை வேட்டையாடும். இவை மிகவும் வேகமாக பறக்கும் தன்மையும் ஓரிடத்தில் நிலையாகப் பறக்கவும் திறனும் கொண்டவை. பெரிய பூக்கொப்புகளில் தலை கீழாகத் தொங்கியும், பூக்கள்முன் இறக்கையடித்துக் காற்றில் தொங்கியும், வண்ணத்துப் பூச்சிபோல் நீண்ட நாக்கை நீட்டியும் தேனைச் சேகரிக்கும். ஆண் தேன்சிட்டுக்கள் பொன் வண்டுபோல் மின்னும் பல நிறங்களைக் கொண்டிருக்கும். பெண்சிட்டுக்கள் மேற்பாகம் சாம்பல் பசுமையாகவும் அடிப்பாகம் மஞ்சளாகவும் இருக்கும். இவை வலசை வராத பறவையினமாக இருந்தாலும் பூக்களைத்தேடி சிறிது தூரம் பயணம் செய்யும் இயல்புடையன.
No comments:
Post a Comment