கண்ணின் நிறத்திற்காக வெள்ளைக்கண் வைரி என்ற பெயரைப் பெற்றிருக்கும் இவை, வேட்டையாடும் வைரி என்ற பிரிவைச் சேர்ந்த பறவைகளாகும். கழுகுகளில் இது சிறியது. அண்டங்காக்கை அளவு இருக்கும். சாம்பலும் பழுப்புமான நிறங்கொண்டது. தொண்டை வெண்மையாக இருக்கும். உடம்பின் அடிப்பாகம் பழுப்பும் வெண்மையும் கலந்து காணப்படும். அலகு கருப்பாகவும், விழிப்படலம் வெண்மையாகவும், கால்கள் வெளிர் மஞ்சளாகவும் இருக்கும்.
நடுத்தர உடல்வாகைக் கொண்ட இவை தெற்காசியா முழுதும் ப(ற)ரந்துக் காணப்படும். வயது வந்தவை (அதாங்க Adult) சிவந்த நிற இறக்கைககளுடன் தனித்துவமான வெள்ளை விழிகளுடன் காணப்படும் இவற்றின் தலைப்பகுதி மட்டும் பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
இவற்றின் வழக்கமான இடங்களில் எப்போதும் அமர்ந்திருக்கக் காணலாம். தந்திக் கம்பங்கள், மரக்கட்டைகள், ஆகியவற்றில் அமர்ந்திருந்து பாய்ந்து இரையைப் பிடிக்கும். காட்டுத்தீ எரிந்து அடங்கியபின் அத்தீயில் வெந்த இரைகளைத் தூக்கிச் செல்லும். தரையில் நடந்து கரையான் போன்ற சிறு பூச்சிகளையும் பிடித்துத் தின்னும், வேகமாகப் பாய்ந்து பறக்கும் ஆற்றல் வாய்ந்தது. காட்டெலி, சுண்டெலி, சிறு பாம்புகள், தத்துக்கிளி, தவளை, நண்டு, ஓனான், அணில் முதலியன இவற்றின் உணவுப் பட்டியலில் உள்ளவை.
இவை இனப்பெருக்க காலங்களில் உயரமாகப் பறந்து தனித்துவமான ஒலி எழுப்பி தனது இணையைக் கவர்கின்றன.
- பாலா பாரதி
No comments:
Post a Comment